பொலிஸாரினால் இளைக்கப்படும் அநீதிகளுக்கு நட்டஈடு வழங்க நடவடிக்கை
பொலிஸாரிடம் நீதியை பெற்றுக்கொள் வதற்காக பொலிஸாரை நாடும்போது அநீதிக்கு முகம்கொடுப்பவர்களுக்கு நட்டஈட்டை வழங்கும் நடைமுறை யொன்றை அறிமுகப்படுத்த பொலிஸ ஆணைக்குழு கவனம் செலுத்தியுள்ளது எனவும், இது சம்பந்தமான சட்டத்தை தயாரிப்பது தொடர்பில் அரசாங்கத்திடம் பரிந்துரைகளை முன்வைப்பதற்கு தயாராகி வருவதாகவும், ஆணைக்குழுவின் செயலாளர் ரி.எம்.கே.பி.தென்னகோன் தெரிவித்துள்ளார்.
சில சமயங்களில் தவறிழைக்காத ஆட்கள் கைது செய்யப்படுவதன் காரணமாக அவர்களின் கீர்த்தி நாமத்திற்கு அவதூறு ஏற்படுவதாகவும், இது தொடர்பாக தமது ஆணைக்குழுவுக்கு பல முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே இதனை கருத்தில் கொண்டு,பொலிஸாரின் நடத்தை காரணமாக இளைக்கப்படும் அநீதிகளால் பாதிக்கப்படுபவர்களுக்கு நட்டஈட்டை வழங்குவதற்கான புதிய நடைமுறையை பரிந்துரைக்கவுள்ளதாக பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் ரி.எம்.கே.பி.தென்னகோன் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment