மொரிடீனிய ஜனாதிபதி மீது துப்பாக்கி பிரயோகம்
மொரிடீனிய ஜனாதிபதி மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் காயங்களுக்குள்ளான ஜனாதிபதி மொஹமட் அவுல்ட் அப்துல் அசீஸ், சிகிச்சைகளுக்கென இராணுவ வைத்தி யசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் ஜனாதிபதிக்கு பாரியளவிலான பாதிப்பு இல்லை என அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் குறித்த துப்பாக்கி பிரயோகமானது கைத்தவறி இடம்பெற்றதென அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் ஹமீத் அவுல்ட் மஜுபி தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி பாதுகாப்பு அதிகாரிகளுடன், அந்நாட்டின் நோஆ கோட் நகருக்கு விஜயம் செய்த போதே குறித்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் சம்பவம் தொடர்பில் விசேட விசாரணைகள் இடம்பெற்று வருவதாக மொரிடீனிய தகவல்கள் தெரிவிக்கின்றன.
0 comments :
Post a Comment