நேபாளத்தைச் சேர்ந்த இளம் பெண்களை விபசாரத்தில் ஈடுபட அழைத்துச் சென்ற இலங்கையர் கைது
நேபாளத்தைச் இளம் பெண்கள் நால்வரை அழைத்துச் சென்ற இலங்கை நபரொருவர் சென்னை விமான நிலையத்தில் குடியுரிமை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, இலங்கையை சேர்ந்த முகம்மது நிசார் (32) என்பவர் நேற்று இரவு 4 நேபாள இளம் பெண்களுடன் சென்னை விமான நிலையத்திற்கு வந்தார்.
குமுதா (20), புஷ்பாஞ்சலி (21), தாரா (20), பமீலா (21) ஆகிய இளம் பெண்களும் கொழும்பு செல்ல கடவுச்சீட்டு சரிபார்க்கப்பட்டது.
அவர்களது கடவுச்சீட்டு, நுழைவுச்சீட்டு அனைத்தும் சரியாக இருந்தது. சுற்றுலாப் பயண விசாவில் அவர்கள் சென்றனர். விசாரணை முடிந்து விமானத்தில் ஏற 5 பேரும் தயாராக இருந்தனர்.
குடியுரிமை அதிகாரிகளுக்கு திடீரென அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது. அதிகாரிகள் 4 பெண்களிடமும் விசாரணை நடத்தினார்கள். அவர்கள் இந்தியில் பேசினார்கள்.
வேலைக்கு அழைத்து செல்வதாக கூறி அங்கு விபசாரத்தில் தங்களை ஈடுபடுத்துவார் என்று அவர்கள் தெரிவித்தனர்.
கொழும்பில் இருந்து டுபாய்க்கு அழைத்து சென்று அங்கு சில நாட்கள் விபசாரத்தில் ஈடுபடுத்துவார். இதுபோல பலமுறை அழைத்து சென்றுள்ளார். எங்களை விட்டு விடுங்கள் என்று இளம்பெண்கள் கதறி அழுதனர்.
முகவர் முஹமது நிசார் கொழும்பு வழியாக இளம் பெண்களை டுபாய்க்கு அழைத்து செல்வது வழக்கம். கொழும்பு வழியாக சென்றால் ‘விசா’ தேவையில்லை. அதனால் அந்த வழியாக நேபாள பெண்களை அழைத்து சென்று விபசாரத்தில் ஈடுபடுத்த திட்டமிட்டு இருந்தது விசாரணையில் தெரிய வந்தது.
இதையடுத்து, இளம் பெண்கள் அரசு கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டனர். ஆலந்தூர் நீதிமன்றத்தில் முஹமது நிசார் ஆஜர்படுத்தப்பட்டார்
0 comments :
Post a Comment