சீ.. சீ இந்த பழம் புளிக்கும்:ரிச்சா
பிரியாணி படத்தின் கதையை திடீரென இயக்குநர் வெங்கட் பிரபு மாற்றியதால் தான் அந்தப் படத்திலிருந்து விலகி விட்டாராம் ரிச்சா கங்கோபாத்யாயா.
சிம்பு, தனுஷ் என அடுத்தடுத்து ஜோடி போட்டு பட்டையைக் கிளப்பியவர் ரிச்சா. ஆனால் அதற்குப் பின்னர் பார்ட்டியை ஆளைக் காணோம். இடையில் திடீரென வெங்கட் பிரபுவின் பிரியாணி படத்தில் கார்த்தியுடன் சேர்ந்து நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகின.
ஆனால் அதே வேகத்தில் அப்படத்தில் ஹன்சிகா மோத்வானி புக் ஆனதாகவும் செய்திகள் வந்ததால் ரிச்சா மேட்டர் குழப்பமானது.
ஆனால் தன்னிடம் சொன்ன கதையில் இயக்குநர் மாற்றம் செய்ததால்தான் அதிருப்தியடைந்து அவராகவே வெளியேறி விட்டாராம் ரிச்சா. இதை அவரே தனது ட்விட்டரில் சொல்லியுள்ளார்.
இதுகுறித்து ரிச்சா கூறுகையில், கதையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டதால், எனது கதாப்பாத்திரத்தின் அழுத்தம் குறைந்துவிட்டது.
இதனால்தான் இந்த படத்தில் இருந்து நான் வெளியேறிவிட்டேன். இதனை இயக்குநர் புரிந்து கொள்வார் என்று நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார் ரிச்சா..
இருந்தாலும் எதிர்காலத்தில் தன்னை வெங்கட் பிரபு தனது புதிய படத்தில் நடிக்க அழைப்பார் என்ற நம்பிக்கையில் இருப்பதாகவும் கூறியுள்ளார் ரிச்சா.
0 comments :
Post a Comment