கடைசியில் பொன்சேகாவுக்கு மிஞ்சுவது மனைவியும் பிள்ளைகளுமே.
சரத் பொன்சேகாவை அரசியலுக்கு இழுத்து வந்தவர்கள் எல்லோரும் அவரைக் கைவிட்டு ஓடிவிட்டார்கள். ஜனாதிபதி ஏற்கனவே கூறியது போல சரத் பொன்சேகாவுக்கு கடைசியில் மிஞ்சப் போவது, அவரது மனைவுயும் இரண்டு பிள்ளைகளும் மட்டும் தான் என்று அரச வளங்கள் மற்றும் தொழில்முனைவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும் ஆரம்பத்தில் இருந்து இலங்கை இரண்டு பிரதான கட்சிகளுக்கு அப்பால் கூட்டணி அமைத்து செயல்பட்டவர்களின் ஜாதகம் மக்களுக்குத் தெரியும் என்றும், சிறந்த கூட்டணி அமைப்பாளரான முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க கூட கடைசியில் ஸ்ரீலசுக ஊடான அரசியல் பயணத்தினாலேலே ஆட்சியைப் பிடித்தார் என்றும், புரட்சி மூலம் ஆட்சியைப் பிடிக்க நினைத்த ரோகண விஜேவீரவின் முடிவு நமக்குத் தெரிந்ததே என்று அவர் மேலும் கூறினார்.
0 comments :
Post a Comment