புலி உறுப்பினர்கள் மூவர் ஆயுதங்களுடன் தமிழ் நாட்டில் கைது
ஒரு தொகை வெடி பொருட்களுடன் மூன்று விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள், தமிழ்நாடு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ள சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்கும் நீதிமன்றத்தில் இரண்டு பொலிஸார் இது தொடர்பாக விளக்கமளித்துள்ளனர். .
இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள விடுதலைப்புலிகள் அமைப்பின் செயற்பாடுகள் குறித்து, கண்டறிவதற்கு, நீதிமன்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கு தலைமை தாங்கும் இந்திய அரசாங்க சட்டத்தரணி வி.கே. ஜேன் கருத்து தெரிவிக்கையில், இந்தியாவில் விடுதலைப்புலிகளின் தொடர்ந்தும் தடை செய்யப்பட வேண்டுமென தெரிவித்தார்.
விடுதலைப்புலிகளின் பயங்கரவாத செயற்பாடுகளை தடுப்பதற்கு, இந்திய அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
1991 ஆம் ஆண்டு ராஜிவ் காந்தி படுகொலை செயயப்பட்டதை அடுத்து, தழிழீழ விடுதலைப்புலி பயங்கரவாத அமைப்பு, இந்தியாவில் தடை செய்யப்பட்டது.
விடுதலைப்புலிகள் அமைப்பு, இந்தியாவிற்கு எதிரான கொள்கையில் செயற்படுவதனால், தொடர்ந்தும் அவ்வமைப்பு இந்தியாவிற்கு அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. 2012 ஆம் ஆண்டு ஜூலை மாதம் மீண்டும் விடுதலைப்புலிகள் மீதான தடை நீடிக்கப்பட்டது.
0 comments :
Post a Comment