பாகிஸ்தான் இரட்டை வேடம் போடுவதை நிறுத்த வேண்டும்- ஹமீட் கர்ஷாயி
பயங்கரவாதத்தை மற்றவர்களுக்கு எதிரான கருவியாக பயன்படுத்துவதை பாகிஸ்தான் நிறுத்த வேண்டுமென ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி ஹமீட் கர்ஷாயி வலியுறுத்தியுள்ளார். இதனால் எவருக்கும் பயனில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாகிஸ்தான் பாடசாலை மாணவி மலாலா யுசுப்ஷாய் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் சந்தர்ப்பத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
குறித்த மாணவி மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலானது பாகிஸ்தான் அரசாங்கத்தின் அரசியல் தந்திரோபாயங் களினால் மக்கள் துன்புறுத்தப்படுகின்றார்கள் என்பது தெளிவாகுவதாக ஹமீட் கர்ஷாயி குறிப்பிட்டுள்ளார். இது மிகவும் கசப்பான உண்மை என்பதை தான் அறிவதாகவும் தலிபானியர்களுக்கு மிகவும் பாதுகாப்பான புகலிடமாக பாகிஸ்தான் காணப்படுவதாகவும் ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இதேவேளை தலிபான் அமைப்பினருக்கு பாகிஸ்தான் அரசாங்கம் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஒத்துழைப்பு வழங்கி வருவதாக ஆப்கானிஸ்தான் ஜனாபதிபதி ஹமீட் கர்ஷாயி ஏற்கனவே குற்றம் சுமத்தியிருந்தமை குறிப்பிட த்தக்கது.
0 comments :
Post a Comment