சீட்டு முறையென்ற போர்வையில் பல இலட்சம் நிதி மோசடி செய்த பெண் கைது
சீட்டு முறையென்ற போர்வையில் பல இலட்சம் ரூபா நிதி மோசடியில் ஈடு பட்ட பெண் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். மித்தெனிய பிரதே சத்தை வசிப்பிடமாக கொண்ட இவர் 50 இலட்சம் ரூபாவிற்கு மேற்பட்ட தொகையை மோசடி செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு ள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான பிரிஷாந்த ஜெயக்கொடி தெரிவிக்கின்றார். மித்தெனிய பிரதேசத்தில் இந்த சம்பவத்துடன் தொடர்புபட்ட பெண்னொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கூடுதலாக வட்டி வழங்குவதாக கூறி பணத்தை பெற்று இவர் மோசடி செய்துள்ளார்.
இவ்வாறு நிதி நிறுவனங்களை நடத்திய பலரும் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர் எனவும், கூடுதலான வட்டி உட்பட மேலும் வசதிகள் வழங்கப்படுதாக கூறி பணத்தை பெறும் நிதி நிறுவனங்கள் உள்ளிட்ட இவ்வாறான நபர்கள் தொடர்பில் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்றும், இவ்வாறான வலைகளில் சிக்குண்டு பணத்தை வீணாக இழக்க வேண்டாம் என்றும், நிதி முதலீட்டுக்கு பாதுகாப்பு மிகுந்த அரச வங்கிகள் உட்பட நிதி நிறுவனங்கள் உள்ளன எனவும், இது தொடர்பில் கவனம் செலுத்துமாறு மக்களை கேட்டுக் கொள்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment