த.தே.கூட்டமைப்பின் உட்கட்சி முரண்பாடுகள் உக்கிர கட்டத்தில்
தமிழ் தேசிய கூட்டமைப்பின் உட்கட்சி முரண்பாடுகள் உக்கிரமடைந்துள்ளது என தெரிவிக்கப்படுகின்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிர்வாகத்தில் இயங்கும் யாழ். வல்வெட்டித்துறை நகர சபையின் முதல்வருக்கு எதிராக, அக்கட்சியின் உறுப்பினர்கள் சிலர், கொண்டு வந்த நம்பிக்கையில்லா பிரேரணை, மேலதிக வாக்குகளினால் நிறைவேறியுள்ளது.
நகர சபை மேயர் நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்து, இந்த நம்பிக்கையில்லா பிரேரணையை, தமிழ் தேசியக் கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் சபையின் உப தலைவர் ரீ. சதீஷ் சமர்ப்பித்தார். இதற்கு ஆதரவாக 6 உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர். மூன்று பேர், எதிர்த்து வாக்களித்தனர் என தெரிவிக்கப்படுகின்றது
0 comments :
Post a Comment