எல்.ரி.ரி.ஈ இயக்க புலனாய்வு துறையின் இரு உறுப்பினர்களுக்கெதிராக வழக்குத் தாக்கல்
எல்.ரி.ரி.ஈ இயக்க புலனாய்வு துறையின் இரு உறுப்பினர்களுக்கு எதிராக கொழு ம்பு மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பயங்கரவாதத்தை ஒழிக்கும் சட்டத்தின் கீழ் சட்டமா அதிபர் திணைக்களம் இந்த குற்றப்தத்திரத்தை கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது
இவ்விரு சந்தேக நபர்களும் கொழும்பில் தற்காலிக இடமொன்றில் தங்கியிருக்கும் போதே பயங்கராவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டனர். எல்.ரி.ரி.ஈ புலனாய்வு துறையின் உத்தரவிற்கு அமைய கொழும்பிற்கு வந்திருந்த இவர்கள், பிரபுக்களின் பிரயாணங்கள் தொடர்பான தகவல்களை திரட்டுவதையே நோக்கமாக கொண்டிருந்தனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது
பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு இடங்கள் தொடர்பிலான பல தகவல்களையும் இவர்கள் பெற்றிருந்ததாக விசார ணைகள் மூலம் தெரியவந்துள்ளன. வழக்கு விசாரணை நிறைவடையும் வரை இரு சந்தேக நபர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
0 comments :
Post a Comment