பாராளுமன்றத்தில் தமிழில் பேசும் போது சிங்களத்தில் பேசுமாறு அழுத்தம் கொடுக்க முடியாது
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பாரா ளுமன்றத்தில் மும்மொழியிலும் உரை யாற்ற உரிமையுள்ளது என்றும், தமிழில் உரையாற்றாது சிங்களத்தில் பேசுமாறு அழுத்தம் கொடுக்க முடியாதென ஐ. ம. சு.மு. பாராளுமன்ற உறுப்பினர் ஏ. எச். எம். அஸ்வர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக சுற்றாடல் அமைச்சரிடம் கேட்ட கேள்விக்கு, சுற்றாடல் அமைச்சர் ஏ. ஆர். எம். ஏ. காதர் தமிழில் பதிலளித்தார். ஆனால், சிங்களத்தில் பதில் வழங்குமாறு கயந்த கருணாதிலக்க எம்.பி. கூறினார்.
இதன் போது ஒழுங்குப் பிரச்சினையொன்றை எழுப்பிய பாராளுமன்ற உறுப்பினர் ஏ. எச்.எம். அஸ்வர் தமிழில் பதில் வழங்குகையில் சிங்களத்தில் பேசுமாறு அழுத்தம் வழங்க முடியாது எனறும், பாராளுமன்றத்தில் உரை பெயர்பாளர்கள் பணிபுரிகிறார்கள் என்றும் அவர்களின் மூலம் அவற்றை செவிமடுக்க முடியும் எனவும் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment