இலங்கை பாராட்டத்தக்க திட்டங்களை செய்துள்ளதாம் -பான் கீ மூன்
இலங்கையின் அபிவிருத்தி திட்டங்கள் பாராட்டத்தக்கவை எனவும், இலங்கை யின் தற்போதைய நிலைமை மிக உயர் மட்டத்தில் காணப்படுவதாகவும், ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் ஜீ.எல். பீரிஸை சந்தித்த போதே, ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூன், இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவின் உயர்ஸ்தானிகர் நவநீதம் பிள்ளையை இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வதற்கு அழைப்பு விடுத்தமைக்காகவும், அத்துடன் அப்பேரவையின் தொழில்நுட்ப குழுவினர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டமையை தாம் பாராட்டுவதாகவும், பான் கீ மூன் இச்சந்திப்பின்போது தெரிவித்தார்.
மீள்குடியேற்ற நடவடிக்கைகள் மற்றும் மெனிக்பாமிலிருந்த அகதிகளை மீள்குடியேற்றியமை, கிழக்கு மாகாண சபை தேர்தல் இடம்பெற்றமை, சிவில் சமூகம் மீண்டும் ஏற்படுத்தப்பட்டமை, கற்ற பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளை அமுல்ப்படுத்தியமை ஊடாக, ஐக்கிய நாடுகள் அமைப்பின் நிபுணத்துவ அறிவு உள்ளிட்டவை இலங்கைக்கு கிடைக்குமென, பான் கீ மூன் இங்கு தெரிவித்தார்.
முன்னாள் எல்ரிரிஈ உறுப்பினர்கள் புனர்வாழ்வளிக்கப்படுதல், மீள்குடியேற்றம் பூர்த்தியடைந்தமை, வடக்கில் ராணுவ பிரசன்னத்தை குறைத்தமை போன்ற நடவடிக்கைகளை, அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. அத்துடன் மாகாண சபை தேர்தல், பாராளுமன்ற தெரிவுக்குழுவின் செயற்பாடுகளுடாக அனைத்து கட்சிகளையும், ஐக்கியப்படுத்துவதன் மூலம், அரசாங்கம் கணிசமான பொறுப்புகளை நிறைவேற்றியுள்ளதாக, அமைச்சர் ஜீ.எல். பீரிஸ், இச்சந்திப்பின்போது சுட்டிக்காட்டினார்.
இலங்கையில் சிறந்த முதலீட்டுக்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன. பொதுநலவாய அமைப்பின் மாநாடு, இலங்கையில் இடம்பெற்றமைக்கு இணைவாக அடுத்த வருடம் இவ்வமைப்பின் வர்த்தக பேரவையின் கூட்டமொன்றும் இடம்பெறவுள்ளது எனவும், பாரிய அபிவிருத்தி திட்டங்களுடாக இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாகவும் தெரிவித்த அமைச்சர் ஜீ.எல். பீரிஸ், சர்வதேச இளைஞர் சம்மேளன கூட்டம் 2014 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெறவுள்ளதாகவும், பான் கீ மூன்நாயகத்திடம் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment