Thursday, October 4, 2012

பாதுகாப்புத் தேடி ஓடமுயன்ற ஊடக வலையமைப்பின் ஊழியரை தேடும் பணிகள் ஆரம்பம்

பண்டாரவளை நாயபெத்த ஒளிபரப்பு கோபுரத்தின் அருகில் குளவிகளின் தாக்குதலிலிருந்து தன்னை பாதுகாப்ப தற்காக ஓட முயன்று காணாமல் போன சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலை யமைப்பின் ஊழியர் சமிந்த அருணசாந்தவை தேடும் பணிகள் தொடர்ந்தும் இடம்பெறுகின்றன.

சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்பின் பண்டாரவளை நாயபெத்த ஒளிபரப்பு கோபுரம் அமைந்துள்ள அலுவலகத்தில் பணியாற்றி வந்த சமிந்த அருணசாந்தவும், இராணுவ வீரர் ஒருவரும் நேற்று குளவிகளால் தாக்கப்பட்டனர்.

குறித்த இராணுவ வீரர் கோபுர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தவராவார். குளவிகள் தாக்கியதையடுத்து இவர்கள் இருவரும் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக ஓடியுள்ளனர். இராணுவ வீரர் வசமிருந்த தொலைத்தொடர்பு கருவியின் உதவியுடன் குறுகிய நேரத்தில் அவர் மீட்பு படையினரால் கண்டு பிடிக்கப்பட்டார்.

சமிந்த அருண தொடர்பாக இதுவரை எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை என்பதுடன் அவரை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றன. இவர் தொடர்பான தகவல்கள் கிடைத்தால், உடனடியாக 011-2774424 எனும் தொலைபேசி இலகக்த்திற்கு அறிவிக்குமாறு, சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்பு வேண்டுகோள் விடுக்கிறது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com