பாலியல் இலஞ்சம் கேட்ட இரண்டு பொலிஸார் கைது
குடும்பத் தகராறு காரணமாக பொலிஸில் முறைப்பாடு செய்த பெண்ணெருவருக்கு சார்பாக பிரச்சினையைத் தீர்க்க அவரிடம் பாலியல் இலஞ்சம் கேட்டு, அவரை ஓட்டலுக்கு அழைத்துச் சென்ற அனுராதபுரம் சேனகபுரம் பொலிஸ்காரர் ஒருவர் நேற்று தலாவையில் இலஞ்ச ஆணையத்தால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேபோல பொலனறுவை பொலிஸைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர் ஒருவரும், பெண்ணின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு பாலியல் இலஞ்சம் கேட்டு அவரை ஹிங்குரான ஓட்டல் அறையொன்றுக்கு அழைத்துச் சென்றிருந்த வேளையில் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப் படுகின்றது.
0 comments :
Post a Comment