தமிழகத்திற்கான பயண எச்சரிக்கையை நீக்கியது இலங்கை
தமிழகத்திற்கு இலங்கையர்கள சுற்றுலா மேற்கொள்வதற்கு விதிக்கப்பட்டிருந்த பயண எச்சரிக்கை அரசாங்கத்தினால் நீக்கப்பட்டுள்ளது. இந்த பயண எச்சரிக்கை இன்று நீக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இந்தியாவிலுள்ள பூண்டி மாதா கோவில் திருவழாவில் கலந்து கொள்ள சென்ற இலங்கை யாத்திரிகர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டமையை தொடர்ந்தே இலங்கை அரசாங்கத்தினால் பயண எச்சரிக்கை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்தியாவிற்கு வருகை தரும் இலங்கையர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதாக இந்திய அரசாங்கம் உறுதியளத்ததன் பின்னரே குறித்த பயண எச்சரிக்கை நீக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment