"சொந்த மக்களின் வாழ்க்கையில் கை வைக்காதே"- த.தே.கூ எதிராக யாழில் ஆர்பாட்டம்
மாகாண சபைகளில் அனுமதி பெற்ற திவிநெகும திணைக்கள சட்டமூலத்தி ற்கு வடமாகாண சமுர்தி பயனாளிகள், மற்றும் சமுர்தி அதிகாரிகள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளதனால், இச்சட்டமூலத்தை உடனடியாக அமுல் படுத்த கோரியும், அதற்கு ஆதரவளிக்க கோரியும் நேற்று யாழ்ப்பாணத்தில் மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.
உச்ச நீதிமன்றத்தின் ஆணையின் பிரகாரம் மாகாண சபைகளில் பெரும்பான்மையான வாக்குகளினால் நிறைவேற் றப்பட்ட திவிநெகும சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு வடமாகாண சபையின் அனுமதி பெற்றுக் கொடுக்கப்பட வேண்டுமென கோரி, நேற்றுக் காலை யாழ் மணிக்கூட்டு கோபுர சந்தியில் பாரிய ஆர்ப்பாட்ட ஊர்வலம் இடம்பெற்றது..
வடமாகாணத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான சமுர்தி பயனாளிகள், சமுர்தி அதிகாரிகள், இதில் கலந்து கொண்டனர். அவர்கள் இவ்வார்ப்பாட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு எதிரான பதாகைகளை ஏந்தியிருந்ததுடன் கூட்டமைப்பிற்கு எதிராக கோசங்களையும் எழுப்பினர். ஏழைகளின் வாழ்வில் விளையாடாதே, சுயநலத்திற்காக சொந்த மக்களின் வாழ்க்கையில் கை வைக்காதே, வருகிறது வாழ்வு எழுச்சி, அதனை வரவேற்போம், வரலாற்று தவறை மீண்டும் செய்யாதே. மக்களின் வாழ்வில் கைவைக்காதே போன்ற கோசங்கள் அடங்கிய பாதாகைகளை ஏந்தி வந்தனர்.
ஆண்கள், பெண்கள், வயோதிபர்கள், இளைஞர்கள், அங்க வீனர்கள் என ஏராளமானோர் இதில் கலந்;து கொண்டனர். அத்துடன் திவிநெகும சட்டமூலத்திற்கு ஆதரவு தெரிவித்து பிரசாரங்களும் மேற்கொள்ளப்பட்டதுடன் வீதி ஊர்வலமும் இடம்பெற்றது. சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இவ்வார்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment