மட்டக்களப்பில் மினி சூறாவளி
மட்டக்களப்பு மாவட்டத்தின் சில பிர தேசங்களில் நேற்று மாலை வீசிய மினி சூறாவளியினால் வீடுகளுக்கு சேதம் ஏற்ப்பட்டுள்ளது. போராதீவுப் பற்று பிரிவுக்குட்பட்ட 35 ஆம் கொலனிப் பகுதியில் மினி சூறாவளி காரணமாக 20 வீடுகள் சேதமடைந்துள்ளன.
சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். காற்றின் வேகத்தை தாங்கமுடியாமல், சில வீடுகளின் கூரைகள் தூக்கி வீசப்பட்டுள்ளதுடன், சில இடங்களில் மரங்களும் வீழ்ந்துள்ளன. வீடொன்றின் கூரை வீசப்பட்டதால் பெண்ணொருவர் காயமடைந்துள்ளார்.
அவர் தற்போது களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். குறித்த பெண்ணின் தலைப்பகுதியில் காயம் ஏற்ப்பட்டுள்ளதாகவும் அவருக்கு சத்திரசிகிச்சை செய்யப்படவுள்ளதாகவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
0 comments :
Post a Comment