டுபாயில் உள்ள இலங்கையர்களிடம் முக்கிய கோரிக்கையை விடுத்துள்ளார் ஜனாதிபதி மகிந்த
நாட்டில் கடந்த 30 வருடகாலமாக இடம்பெற்ற யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு தற்போது பாரிய அபிவிருத்தி செயற்த்திட்டங்கள் ஆரம் பிக்கப்பட்டுள்ள நிலையில், தாய்நாட் டிற்கு எதிராக முன்னெடுக்கப்படும் போலி பிரச்சாரங்களுக்கு எதிராக செயற்படுமாறு டுபாயிலுள்ள இலங் கையர்களிடம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அபிவிருத்தியடைந்து வரும் இலங்கையை பார்வையிட ஒன்றிணையுமாறும் ஜனாதிபதி டுபாயிலுள்ள இலங்கை யர்களிடம் வலியுறுத்தியுள்ளார். நேற்றைய தினம் டுபாயிலுள்ள இலங்கையர்களுடனான சந்திப்பின் போதே போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்ததாக ஜனாதிபதியின் ஊடக இணைப்புச் செயலாளர் விஜயானந்த ஹேரத் தெரிவித்தார்.
இதேவேளை உலக சக்தி மாநாட்டின் இறுதி தினம் இன்றாகும். மாநாட்டின் நிறைவு வைபவம் டுபாயிலுள்ள உலக வர்த்தக மத்திய நிலையத்தில் இடம்பெறவுள்ளதாகவும் விஜயனாந்த ஹேரத் மேலும் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment