அரசியலமைப்பு சட்டத்தை மீறிய பிரதம நீதியரசரை பழிவாங்க மாட்டோம் - அமைச்சர்கள்
அரசியலமைப்பு சட்டத்தை மீறி பிரதம நீதியரசர் நடந்து கொண்டாலும், அவரை பழிவாங்க மாட்டோம் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர். நேற்று மகாவலி மையத்தில் அவசரமாக ஏற்பாடு செய்யப்பட்ட ஊடக சந்திப்பிலேயே, அமைச்சர்களான சுசில் பிரேம ஜயந்த, நிமால் சிறிபால டி சில்வா, மைத்திரிபால சிரிசேன மற்றும் டலஸ் அலகப்பெருமா ஆகியோர் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
திவி நெகும சட்ட மூலம் தொடர்பான உயர் நீதிமன்ற தீர்ப்பானது பாராளுமன்றத்துக்கு அனுப்பப்பட்ட விதம் குறித்து சபாநாயகரின் அறிக்கையானது சகல கட்சித் தலைவர்களின் ஒப்புதலுடன் மேற்கொள்ளப்பட்டதென்று கூறப்பட்டது.
அத்துடன் நீதி மன்றத் தீர்ப்பு சபாநாயகருக்கே அனுப்பப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அது பாராளுமன்ற செயலாளர் நாயகத்துத்கு அனுப்பப் பட்டுள்ளது. இது அரசியலமைப்பை மீறும் செயலாகும் என்று அமைச்சர்கள் தெரிவித்துள்ளார்கள்.
ஆனால் இதனை சாட்டாக வைத்து பிரதம நீதியரசரை பழிவாங்க முயல்வதாக அரசாங்கம் மீது குற்றம் சாட்டப்படுகின்றது. ஆனால், அரசாங்கம் அவ்வாறு செய்யாது. இந்த பிச்சினையை சுமுகமாகத் தீர்த்துக் கொள்ளவே விரும்புகின்றது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
0 comments :
Post a Comment