மலேசியாவினுள் நுழையும் அனைவரதும் விரல் அடையாளங்கள் பரிசோதிக்கப்படுமாம்.
இலங்கையர்கள் மலேசியாவில் பிரவேசிப்பதற்கு, பயோ வீசா முறைமை தேவையென, அந்நாட்டு குடிவரவு திணைக்களம் அறிவித்துள்ளது. மலேசியாவிற்கு பிரவேசிக்கும் வெளிநாட்டவர்களின் கைவிரல் அடையாளங்கள் தூதரகங்களினால் உறுதிப்படுத்தப்படுவதுடன், உல்லாசப் பயணிகள் மலேசியாவிற்குள் பிரவேசிக்கும்போது அந்த விரல் அடையாளங்கள், உறுதிப்படுத்தப்படும். பாதுகாப்பு முறைமைகளுக்கு அமைவாக பெற்றுக்கொள்ளப்படும் கைவிரல் அடையாளமானது, கடவுச்சீட்டுக்களில் உள்ள தரவுகளை ஒத்ததாக இருக்க வேண்டும்.
இத்திட்டம், எதிர்வரும் டிசம்பர் முதலாம் திகதி முதல், நடைமுறைக்கு அமுல்ப்படுத்தப்படுமென, மலேசியாவின் குடிவரவு திணைக்கள பணிப்பாளர் நாயகம் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளிலிருந்து ஏராளமானோர், சுற்றுலாப் பயணிகளாக வருகை தருவதன் காரணமாகவே, மலேசியா இத்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. வீசா மோசடிகளை தடுப்பதற்காகவே, இந்நடைமுறை அமுலுக்கு கொண்டு வரப்படுவதாகவும், மலேசியா குடிவரவு திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
0 comments :
Post a Comment