Tuesday, October 23, 2012

மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய உடந்தையாக இருந்த தாய் கைது

கொடகாவலவில் பகுதியில் சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த முன்னாள் பொலிஸ் சார்ஜன் ஒருவரையும் அதற்று உடந்தையாக இருந்த சிறுமியின் தாயையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, குறித்த தாய்க்கும் முன்னாள் பொலிஸ் சார்ஜன்ட்டுக்கும் இடையில் நீண்ட காலமாக கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இதனை வாய்ப்பாக பயன்படுத்திக்கொண்ட குறித்த நபர் தாயின் அனுமதியுடன் 11 வயதான குறித்த சிறுமியை கடந்த 3 வருடங்களாக பாலியல் துஷ்பிரயோத்துக்கு உட்படுத்திவந்துள்ளார்.

மேலும் தனது மடிக்கணனியில் ஆபாச படங்களை பார்த்தவாறு பாலியல் துஷ்பிரயோகங்களை மேற்கொண்டுள்ளார். இதன்பின்னர் இச் சம்பவம் தெரியவர தாயும், குறித்த நபரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com