நாட்டுக்கு ஏற்படும் அவப்பெயரை தடுக்க புதிய சட்டம்!
தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்து பாவ னையை தவிர்ப்பதற்கு புதிய சட்ட மொன்றை அறிமுகப்படுத்த தீர்மானிக் கப்பட்டுள்ளது. குறித்த சட்டமானது தேசிய விளையாட்டு அமைப்புக்கு உட்பட்டதாக இருக்குமென அமைச்சர் மஹிந்தானந்த அழுத்கமகே தெரிவித்துள்ளார்.
வீர வீராங்கனைகள் தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்துகளை பாவிப்பதன் காரணமாக சர்வதேச போட்டிகளில் கிடைக்கப் பெறுகின்ற பதக்கங்களை இழக்க வேண்டிய நிலை ஏற்படுகின்றது எனவும், அது நாட்டுக்கு ஏற்படும் அவப்பெயரென அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில் தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்து பாவனையை இல்லாமல் செய்வதற்கும், வீர வீராங்கனைகளுக்கு இது தொடர்பில் தெளிவுபடுத்துவதற்கும் வேலைத்திட்ட மொன்றும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அமைச்சர் மஹிந்தானந்த அழுத்கமகே மேலும் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment