மடிக்கணினியை நீதிமன்றத்தில் ஒப்படைக்கவும்-விஜித ஹேரத் எம்.பிக்கு நீதிமன்றம் உத்தரவு
பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தனது மடிக்கணினியை நீதி மன்றத்தில் கையளிக்குமாறு கடுவலை நீதவானும், மேலதிக மாவட்ட நீதிபதியுமான திருமதி லங்கா ஜயரட்ன உத்தரவிட்டுள்ளார்.
தான் 2010 செப்டம்பர் 7 ம் திகதி பாராளுமன்றத்தில் இருந்து வீடு திரும்பிய போது, கதவு உடைக்கப்பட்டு மடிக் கணினி, இரண்டு கைப்பேசிகள் உட்பட பல பொருட்கள் கொள்ளையிடப்பட்டிருந்ததாக விஜித ஹேரத் முறைப்பாடு செய்திருந்தார்.
இதற்கிணங்க பொலிஸார் சந்தேகத்தின் பேரில் காலி நெலுவையைச் சேர்ந்த சுமித் விஜேவீர என்பவர் கைதுசெய்து, நீதிமன்ற உத்தரவுப்படி தடுப்புக்காவலில் வைத்தனர். அத்துடன் நீதிமன்ற விசாரணையில் கைது செய்யப்பட்ட நபர் தன்மீது சுமத்தப்பட்ட குற்றச் சாட்டுகளை மறுத்தார்.
இதனையடுத்து மடிக்கணினி ஒரு சாட்சிப் பொருளாக இருப்பதால் அதனை நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறு உத்தரவிட்ட நீதிபதி வழக்கை 2013 பெப்ரவரி 01ம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
0 comments :
Post a Comment