எஜமானருக்கு அதிக பணத்தை ஈட்டிக் கொடுத்த வளர்ப்பு நாய்
இங்கிலாந்து நாட்டில் ஆடுகளை காவல் காக்கும் நாய்களுக்கு கடும் கிராக்கி உண்டு. இதில் சிறப்பாக பயிற்சி பெற்ற நாய்கள் பெரும் தொகைக்கு ஏலம் போகின்றன. இத்தகைய நாய்களுக்கு பயிற்சி அளிப்பதில் புர்னிலி என்ற இடத்தை சேர்ந்த ஷான் ரிச்சர்டு கில்லாடி ஆவார்.
சமீபத்தில் இவர் பயிற்சி கொடுத்த 18 மாதமே வயதுள்ள காவல் நாய் ஏலம் விடப்பட்டது. இந்த நாயை வாங்க பலர் போட்டா போட்டியிட்டனர். இறுதியாக அது ரூ.7 லட்சத்துக்கு ஏலம் போனது.
இதற்கு முன்பு ரூ.5 1/4 லட்சத்துக்கு ஏலம் போனதே சாதனையாக இருந்தது. தற்போது ஷான் ரிச்சர்டு வளர்த்த நாய் அதையும் மிஞ்சி புதிய உலக சாதனை படைத்து விட்டது.
0 comments :
Post a Comment