Saturday, October 27, 2012

தாயின் கவனக்குறைவால் கிணற்றில் வீழ்ந்து நான்கு வயது பாலகன் பரிதாப மரணம்


தாயின் கவனக் குறைவால் கிணற்றில் நீர் அள்ள முயற்சி செய்த நான்கு வயது பாலகன்  கிணற்றில் தவறி வீழ்ந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று  மதியம் 2 மணியளவில்  யாழ். கமால் வீதியில்இடம்பெற்றுள்ளது.
இதில்  அதே இடத்தைச் சேர்ந்த சுமந்தன் பவிஷன் வயது 4 என்ற பாலகனே  உயிரிழந்தவராவார்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது

கணவனுக்கு மதியச் சாப்பாடு கொடுப்பதற்காக தாயார் தனது ஒரு பிள்ளையை அழைத்துக் கொண்டு சென்றுள்ளார். வீட்டில் 3 மாதப் பிள்ளையுடன் இருந்த சிறுவன் கிணற்றில் நீர் அள்ளச் சென்றுள்ளார்.

இதன்போது வீட்டிலிருந்த இழுகொடியில் தண்ணீர் அள்ளுவதற்காக வாளியை கிணற்றில் போட்ட போது தவறி கிணற்றில் விழுந்து உயிரிழந்தள்ளார்.

இசம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் விசாரணைகை மேற்கொண்டனர்.

சடலம் பிரேதப்பரிசோதனைகளின்; பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com