இலங்கை தமிழருக்கு இறுதிநேரத்தில் வெற்றி
அவுஸ்திரேலியாவில் இருந்து இலங்கைக்கு இன்று நாடு கடத்தப்படவிருந்த தமிழர் இறுதிநேரத்தில் நீதிமன்றத்தில் அவசர மனு மூலம் வெற்றிப்பெற்றுள்ளதாக அவுஸ்திரேலிய வானொலி தெரிவித்துள்ளது
42 வயதான இந்த இலங்கை தமிழர், அவுஸ்திரேலிய நேரப்படி இன்று பிற்பகல் 3 மணிக்கு நாடு கடத்தப்படவிருந்தார்
எனினும் சிட்னியின் பிராந்திய நீதிமன்றம் அவரின் நாடுகடத்தலுக்கு தடையுத்தரவை பிறப்பித்துள்ளது
இந்தநிலையில் குறித்த அகதி இன்று தாக்கல் செய்த அவசரமனு விசாரணை முடியும்வரை அவுஸ்திரேலியாவில் தங்கியிருக்கமுடியும்
இந்த அகதி கடந்த இரண்டு வருடக்காலமாக மேல்போன் தடுப்பு முகாம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், அண்மையில் சமூகத்துடன் சேர்க்கப்பட்டார்
எனினும் சில தினங்களில் அவரை அழைத்த அவுஸ்திரேலிய குடிவரவு அதிகாரிகள், நாட்டில் இருந்து அவர் வெளியேற்றப்படவுள்ளதாக அறிவித்தனர்
இந்தநிலையில் இன்று நாடு கடத்தப்படவிருந்த அவர் தற்கொலை முயற்சி ஒன்றில் ஈடுபட்டார்
இதனையடுத்து அவரை விடுவிக்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களுக்கும் மெல்போன் காவல்துறையினருக்கும் இடையில் மோதல் ஒன்றும் இடம்பெற்றது
இதற்கிடையிலேயே சிட்னி நீதிமன்றத்தில் அவரது நாடு கடத்தலுக்கு எதிராக தடையுத்தரவு விதிக்கப்பட்டது
0 comments :
Post a Comment