இலங்கையின் தீவிர முயற்சியின் பலன் - கிறிமின் தீர்மானம் நிகழ்ச்சி நிரலிலிருந்து நீக்கம்
இலங்கை தொடர்பாக விசாரணை மேற்கொள்வதற்கு, சுதந்திரமான பன் னாட்டு பொறுப்புக் கூறல் அமைப்பு ஒன்றை நிறுவதற்கு அமெரிக்க காங்கிரசின் குடியரசுக் கட்சியின் உறுப்பினரான மைக்கல் கிறிம் கொண்டு வந்த தீர்மானம், இவ்வாண் டுக்கான நிகழ்ச்சி நிரலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் உள்ள இலங்கைத் தூதுவர் ஜாலிய விக்கிரமசூரிய, மற்றும் இலங்கை அதிகாரிகள், அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களுடன் மேற்கொண்ட தீவிர முயற்சியின் பலனாக இவ்வாண்டுக்கான நிகழ்ச்சி நிரலில் இருந்து அது நீக்கப்பட்டுள்ளது.
எனினும் அந்த சபைத் தீர்மானம் அடுத்த ஜனவரிக்குள் நிறைவேற்ற கிறிம் முயற்சிக்கிறார் என்று தெரியவருகின்றது. இதற்கான நிதிப் பங்களிப்பை அமெரிக்க வாழ் இலங்கையர்கள் வழங்கியிருப்பதாக அறிய முடிகின்றது. குடிமக்கள் அல்லாதவர்களிடம் இருந்து வரம்புக்கு மேலான நிதியைப் பங்களிப்பாக பெற்றுக்கொண்டமை தொடர்பில் சமஷ்டி கிராண்ட் ஜூரியால் ஏற்கனவே விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
யுத்தத்தின் பின்னரான இலங்கையில் ஏற்பட்டுவரும் துரித மாற்றங்கள் பற்றி இலங்கை அதிகாரிகள் அமெரிக்க காங்கிரஸ்காரர்களுக்கு நன்கு விளக்கியிருக்கின்றனர்.
0 comments :
Post a Comment