விருப்பு வாக்கு மூலமான உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முறைமைக்கு முற்றுப்புள்ளி?
இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப் படவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திருத்த சட்டமூலம் நிறைவேற்றப்பட் டால் தற்போதுள்ள விருப்பு வாக்கு முறைமை முற்றாக இரத்து செய்யப் படும் என அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
இந்த சட்டமூலம் தொடர்பான இன்று பாராளுமன்றத்தில விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் இச் சட்டமூலத்தின் ஒவ்வொரு சரத்துக்கள் தொடர்பாகவும் இணக்கப்பாடுகளை ஏற்படுத்தி முதலாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று நடத்தப்படவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய சட்டம் நடைமுறைக்கு வந்தவுடன் நீண்டகாலமாக நாட்டில் அமுலில் இருக்கும் விருப்பு வாக்குகளை அடிப்படையாகக் கொண்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முறைமை நீக்கப்படும் எனவும், இதற்கமைய 70 வீதம் தொகுதி முறைமையும், 30 வீதம் விகிதாசார முறைமையும், கலந்த புதிய உள்ளூராட்சி மன்றங்களை ஸ்தாபிக்க உத்தேச சட்டம் வழிவகுக்கும் என அமைச்சர் தினேஷ் குணவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment