பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மீண்டும் போராட்டத்திற்கு குதிக்கவுள்ளனர்?
பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மீண்டும் போராட்டத்தினை மேற்கொள்வதற்கு தயார் நிலையில் உள்ளதாக அனைத்துப் பல்கலைக்கழக ஆசிரிய சங்கம் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் 100 நாட்கள் நாடளாவிய ரீதியில் உள்ள பல்கலைக்கழக விரிவுரையாளர்களினால் முன்னெடுக்கப்பட்டு வந்த போராட்டம் அரசாங்கம் வழங்கிய உறுதி மொழியினை அடுத்த கைவிடப்பட்டது.
எனினும் அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட உறுதி மொழிகள் எவையும் இதுவரையில் நிறைவேற்றப்படவில்லையென அனைத்துப் பல்கலைக்கழக ஆசிரிய சம்மேளனம் குற்றஞ்சாட்டுகின்றது
இந்த நிலையில் நாளையதினம் இது தொடர்பில் நிதி அமைச்சின் அதிகாரிகளுடன் விசேட சந்திப்பு ஒன்று இடம்பெறவிருப்பதாக விரிவுரையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
எனினும் அரசாங்கம் தமது உறுதி மொழிகளை மீறியுள்ளது. இந்த நிலையில் நிதி அமைச்சின் உறுப்பினர்களுடனான பேச்சுவார்த்தையும் தோல்வியடையும் பட்சத்தில், மீண்டும் தங்களது தொழிற்சங்க நடவடிக்கைகளை ஆரம்பிக்க உள்ளதாக சங்கத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment