இலங்கையருக்கு டுபாயில் தண்டணையும் நாடுகடத்தலும்
பேஸ் புக் ஊடாக பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த பெண்ணுக்கு மரண அச்சுறுத்தல் விடுத்த இலங்கையர் ஒருவருக்கு டுபாய் நீதிமன்றம் 3 மாத சிறைத்தண்டனை விதித்துள்ளது என டுபாய் நாட்டு இலங்கை கொன்சிலர் அலுவலகம் தெரிவிக்கின்றது.
அத்துடன் அவரை தண்டனையின் பின்னர் நாடுகடத்த வேண்டும் என்று அந்நாட்டின் குடியகல்வு குடிவரவு அதிகாரிகளுக்கு பணிப்புரையும் விடுக்கப்பட்டுள்ளது என கொன்சிலர் அலுவலகம் தெரிவிக்கின்றது.
குறித்த நபர் டுபாய் ஓட்டலொன்றின் மின்சார தொழில் நுட்பவியலாளரான கடமையாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
0 comments :
Post a Comment