மஹிந்த ராஜபக்ஷ பாகிஸ்தான், தாய்லாந்து பிரதமர்களுடன் ஜனாதிபதி விசேட கலந்துரையாடல்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாகிஸ்தான், தாய்லாந்து பிரதமர் களை சந்தித்து கலந்துரையாடியு ள்ளார். ஆசிய ஒத்துழைப்பு அரச தலைவர்களுக்கான மாநாட்டின் முதலாவது கூட்டத்தொடரின் போதே ஜனாதிபதி வெளிநாட்டு தலைவர்களை சந்தித்துள்ளார். இதன் போது இலங்கையின் முக்கிய விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாகிஸ்தான் பிரதமர் ராஜா பர்வேஷ் அஷ்ரப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
சீமெந்து மற்றும் சீனி தொழிற்ச்சாலை தொடர்பில் பாகிஸ்தானுடன் இணைந்து செயற்படுவதற்கான வழிமுறை கள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. சிறிய மற்றும் நடுத்தர உற்பத்தியாளர்களின் முன்னேற்றத்திற்கு பாகிஸ்தான் அரசாங்கத்தின் ஒத்துழைப்பை பெறுவது தொடர்பிலும் இரு நாட்டு தலைவர்களும் கவனம் செலுத்தி யுள்ளனர்.
இந்நிலையில் தாய்லாந்து பிரதமர் யிங்லக் ஷினவாத்ரா வோடும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். வர்த்தகத்துறை அபிவிருத்தி தொடர்பில் இரு நாட்டு தலைவர்களும் கலந்துரையாடியுள்ளனர். இதேவேளை நேற்று ஆரம்பமான ஆசிய ஒத்துழைப்பு அரச தலைவர் களுக்கான மாநாடு இன்று நிறைவடையவுள்ளமை குறிப்பிட த்தக்கது.
0 comments :
Post a Comment