Saturday, October 20, 2012

யப்பானில் இளம் பெண்ணை கற்பழித்த அமெரிக்க ராணுவவீரர்கள்: பொதுமக்கள் கொந்தளிப்பு

2-ம் உலகப்போரில் அமெரிக்காவிடம் ஜப்பான் தோல்வி அடைந்ததை அடுத்து ஜப்பானில் அமெரிக்க ராணுவத்தின் ஒருபிரிவு நிரந்தரமாக முகாமிட்டது. அந்த ராணுவ படை இப்போதும் ஜப்பானில் உள்ளது. 47 ஆயிரம் அமெரிக்க வீரர்கள் அங்கு உள்ளனர். அவர்கள் பல்வேறு முகாம்களில் இருக்கின்றனர்.

இதில் ஓகினாவா முகாமில் தங்கியிருந்த 2 வீரர்கள் ஜப்பான் இளம் பெண் ஒருவரை கற்பழித்தனர். இது ஜப்பான் மக்களிடம் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர்கள் அமெரிக்க ராணுவத்துக்கு எதிராக போராட்டத்தில் குதித்து உள்ளனர்.

பொதுமக்கள் அமெரிக் வீரர்களை தாக்க கூடும் என்ற அச்சம் நிலவுகிறது. எனவே அமெரிக்க ராணுவ வீரர்கள் அனாவசியமாக வெளிப்பகுதிகளில் நடமாட வேண்டாம். இரவு 11 மணியில் இருந்து அதிகாலை 5 மணிவரை ராணுவ வீரரகள் யாரும் முகாம், மற்றும குடியிப்பை விட்டு வெளியே செல்ல கூடாது என்று அமெரிக்க ராணுவ தளபதி கட்டுப்பாடு விதித்து உள்ளார்.

இதற்கிடையே கற்பழிப்பில் ஈடுபட்ட வீரர்கள் யார் என்பதை ஜப்பான் போலீசார் கண்டுபிடித்து 2 பேரை கைது செய்தனர். அவர்கள் பெயர் கிறிஸ்டோபர் புரூவ்னிங், டோகியர் வால்கர் என்று தெரிய வந்தது. அவர்களிடம விசாரணை நடந்து வருகிறது.

KTUL.com - Tulsa, Oklahoma - News, Weather

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com