ஐ.சி.சி.முடிவு செய்த பகல்-இரவு டெஸ்டுக்கு ஜான்ரைட் அதிருப்தி
20 ஓவர் போட்டியின் தாக்கல் காரணமாக டெஸ்ட் போட்டிக்கு மசுவு குறைந்து வருகிறது. 5 நாள் நடைபெறும் டெஸ்ட் போட்டியை பார்க்கும் ரசிகர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
காலப்போக்கில் டெஸ்ட் போட்டி அழிந்துவிடும் அபாயம் இருப்பதாக முன்னாள் வீரர்கள் பலர் கருத்து தெரிவித்து இருந்தனர். இதை தொடர்ந்து ஒருநாள் போட்டி, 20 ஓவர் போட்டியை போலவே டெஸ்ட் போட்டியை பகல் -இரவாக நடத்த முடிவு செய்யப்பட்டது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) சமீபத்தில் இதற்கு அனுமதி அளித்தது. டெஸ்ட் போட்டியை பகல்-இரவாக நடத்தும் முடிவுக்கு நியூசிலாந்து முன்னாள் கேப்டனும், இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளருமான ஜான் ரைட் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
நான் ஒரு பழமைவாதி. டெஸ்ட் போட்டி எப்போதும் போல் பகலிலேயே தொடர்ந்து நடைபெற வேண்டும் என்று விரும்புகிறேன். ரசிகர்களின் எண்ணிக்கை அதிகப்படுத்த ஐ.சி.சி. வேறு முடிவை எடுத்து இருக்க வேண்டும். பகல் - இரவு டெஸ்ட் என்ற முடிவை நான் விரும்பவில்லை. ஐ.சி.சி.யின் இந்த முடிவு தவறானது.
இதனால் டெஸ்ட் போட்டி முன்னேற்றம் அடைவதைவிட டெலிவிசன் சேனல்கள் மேம்படும். இந்திய அணிக்கு 20 ஓவர் போட்டி, ஒருநாள் ஆட்டம், டெஸ்ட் என்று தனித்தனி கேப்டன் தேவையில்லை. தற்போது 3 நிலை சுற்றிலும் கேப்டனாக இருக்கும் டோனி அதற்கு தகுதியானவர்தான். டோனி சிறப்பாக செயல்படுவதால் வெவ்வேறு கேப்டன் தேவையில்லை.
இவ்வாறு ஜான்ரைட் கூறியுள்ளார்.
0 comments :
Post a Comment