Saturday, October 13, 2012

சிரியாவை நோக்கி துருக்கி போர் விமானங்கள் பாய்ந்துள்ளன! அடுத்தது போர்தான்

துருக்கிக்கும் சிரியாவுக்கும் இடை யிலான முறுகல் உச்சக்கட்ட த்தை அடைந்ததை அடுத்து, துருக்கி முதல் தடவையாக தமது போர் விமானங்களை சிரியா நாட்டு எல்லையை தாக்குவதற் காக இன்று அனுப்பி வைத்து ள்ளது. இதனையடுத்து துருக்கி போர் விமானங்கள், சிரியா நாட்டு எல்லையில் உள்ள இராணுவ முகாம்கள் மீது தாக்குதல் நடந்தலாம் என ஊகிக்கப்படுகிறது.

துருக்கி நகரம் அஸ்மாரின் மீது நேற்று மாலை சிரியா நாட்டு விமானப்படை ஹெலிகாப்டர்கள் தாக்குதல் நடத்தின. சிரியா ஹெலிகாப்டர்கள் துருக்கி எல்லைக்கு உள்ளே வந்து தாக்குதல் நடத்தியதற்கு பதிலடி கொடுப்பதற்கே, துருக்கி விமானப்படை விமானங்கள் இன்று அனுப்பப்பட்டன என்று துருக்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இன்று புறப்பட்டுச் சென்ற துருக்கி விமானங்கள் எந்த தாக்குதலிலும் ஈடுபடாமல் திரும்பி வந்துள்ளன. ஆனால், அவை சிரியா நாட்டு எல்லைக்குள் அனுமதியின்றி பிரவேசித்து, சிரியா ராணுவத் தளங்கள் மீது வட்டமடித்துவிட்டு திரும்பின. சிரியா ராணுவத்திடம் விமான எதிர்ப்பு பீரங்கிகள் இருந்த போதிலும், அவர்களும் இந்த விமானங்களை சுடவில்லை. இந்த ஒரு ஆழம் பார்க்கும் நடவடிக்கையாகவே தெரிகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com