நித்தியானந்தாவின் பஜனை இனி மதுரையில் இல்லை! ஆடம்பர கட்டில் லாரியில் கிளம்பியது!
மதுரை ஆதீன மடத்தில் இருந்து நித்யானந்தாவை டிஸ்மிஸ் செய்து, அவரும் சிஷ்யர்களும் காலி செய்துவிட்டு போன நிலையிலும், நித்தி பஜனை செய்யும் தளவாடங்கள் மடத்திலேயே இருந்தன. அவற்றை எடுத்துவர சிஷ்யர்களையும், மூன்று லாரிகளையும் மதுரைக்கு அனுப்பி வைத்தார் சுவாமிகள்.
நித்தியை பதவியை விட்டுத் துரத்தியபோதே, அவரது பொருட்களை மடத்திலிருந்து தூக்கிச் சென்று விடும்படியும், தனது பொருட்களை கொடுத்து விடும்படியும் அருணகிரிநாதர் கூறியிருந்தார். தமிழகத்தில் நிலைமை சுமுகமாக இல்லையென கண்ட நித்தி, கர்நாடகாவுக்கு புறப்பட்டு சென்ற அவசரத்தில், ஆதீன மடத்தில் உள்ள தனது சொகுசு கட்டில், பஞ்சு மெத்தை உள்ளிட்ட பஜனை பொருட்களை எடுத்துச் செல்ல முடியவில்லை.
நித்தியானந்தா கர்நாடகா சென்று இரண்டு நாட்கள் ரிலாக்ஸ்டாக இருந்தபின், தமது பஜனைப் பொருட்களை அள்ளிக் கொண்டு வருமாறு தனது சீடர்களைப் பணித்தார். அவர்களும் 3 லாரிகளைப் பிடித்துக் கொண்டு ஆதீன மடத்திற்கு புறப்பட்டு வந்தனர்.
அவர்களை முதலில் ஆதீனம் உள்ளே விடவில்லை.
இவர்கள் தகராறு செய்யலாம் எனக் கருதி, விளக்குத்தூண் போலீஸாருக்குத் தகவல் கொடுத்து அவர்களை வர வைத்தார். அவர்களது முன்னிலையில் பொருட்களை எடுத்துச் செல்லும்படி நித்தியானந்தா ஆட்களிடம் கூறினார்.
இதனால், போலீஸார் முன்னிலையில்தான் நித்தியின் பொருட்களை பேக்கப் செய்தனர் பொருள் மீட்பு பணிக்கு வந்த சிஷ்யர்கள். அனைத்துப் பொருட்களின் பட்டியலும் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
நத்தி சுவாமிகளின் பஜனைக்கு பயன்படுத்தப்பட்ட சொகுசு இருக்கை, கால் வைக்கும் பஞ்சுத் திண்டு, பெங்களூருவில் இருந்து கொண்டுவரப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட சொகுசுக் கட்டில், மற்றும் ஆடம்பர பொருட்கள் 3 லாரிகளில் ஏற்றப்பட்டன. லாரியில் பொருட்களுடன் நித்யானந்த சிஷ்யர்களும் ஏறிச் சென்றனர்.
நித்தி சுவாமிகள் போலீஸ் ஜீப்பில் ஏறுகிறார், கோர்ட் படி ஏறுகிறார், அவரது மானம் கப்பல் ஏறுகிறது.
பஜனைக் கட்டில் லாரியில் ஏறினால் என்ன தப்பு?
0 comments :
Post a Comment