பொருந்தொகையான ஆயதங்களுடன் சிரிய விமானம் துருக்கியினுள் நுழைந்துள்ளதாம்!
பொருந்தொகையான ஆயுதப் பொருட்களுடன் சிரிய நாட்டு விமானம் ஒன்று தமது நாட்டுக்குள் நுழைந்துள்ளதாக துருக்கி தெரிவித்துள்ளது. பயணிகள் விமானமொன்றில் இவ்வாறு ஆயுதங்கள் கொண் டுவரப்பட்டுள்ளதாக துருக்கி பிரதமர் தயீப் ஏர்டோகன் குற்றம் சாட்டியுள்ளார்.
ரஷ்யாவின் மொஸ்கோ நகரிலிருந்து வந்த குறித்த விமானம், துருக்கியின் அன்காரா நகரில் அவசரமாக தரையிரக்கப் பட்டுள்ளது. ரஷ்யாவின் ஆயுத பரிமாற்ற நிறுவமொன் றினால் சிரியா பாதுகாப்பு பிரிவுக்கு ஆயுதங்களை வழங்குதவற்கென குறித்த விமானம் பயன்படுத்தப் பட்டுள்ளதாக துருக்கி பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் அவரின் கருத்தை நிராகரித்துள்ள சிரியா, அரசியல் நோக்கத்திற்காக துருக்கி பிரதமர் தயீப் ஏர்டோகன் உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிடுவதாகவும், இது மிகவும் கீழ்த்தரமான குற்றச்சாட்டு எனவும் தெரிவித்துள்ளது.
அத்துடன் சட்ட விரோதமான முறையில் பயணிகள் விமானத்தில் ஆயுதங்களை கடத்தியுள்ளதாக துருக்கியின் குற்றச்சாட்டுக்கு ரஷ்யாவும் மறுப்பு தெரிவித்துள்ளது. இதேவேளை குறித்த விடயம் காரணமாக சிரியாவிற்கும், துருக்கிற்குமிடையிலான முறுகல் நிலை மேலும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment