இணையதளமூடாக வெளிநாட்டு கடவுச்சீட்டுக்களை பெற்றுக்கொள்ள நடவடிக்கை
இணையதளமூடாக வெளிநாட்டு கடவுச் சீட்டுக்களை பெற்றுக்கொள்ளும் வேலை த்திட்டங்கள், துரிதப்படுத்தப்பட்டுள்ளதா கவும், இணையதளங்களுடாக வெளி நாட்டு கடவுச்சீட்டுக்களை பெற்றுக் கொள்வதற்கான வசதிகள் வெகுவிரை வில் கிடைக்குமென, இலங்கை தகவல் தொடர்பு சாதன தொழில்நுட்ப முகவர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்நிறுவனத்தின் அரச துறையை மீள்கட்டமைக்கும் பிரிவின் பணிப்பாளர் வசந்த தேசபிரிய, இதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். இணையதளமூடாக, கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வதற்கு தேவைப்படும் தொழில்நுட்ப செயற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக, அவர் தெரிவித்தார். சட்டரீதியான தேவைகளை நிறைவேற்றுவதற்கும், நடவடிக்கை எடுக்கப் படுமென, அவர் கூறினார்.
0 comments :
Post a Comment