ஓமான் அமைச்சர் இலங்கைக்கு விஜயம்
நாட்டின் பெருந்தொருக்களை அபிவிருத்தி செய்வதன் பொருட்டு சவுதி நிதியம் மற்றம் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் நேற்றைய தினம் ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ முன்னிலையில் இது கையெழுத்தானது.
இந்த ஒப்பந்தத்தில் அரசாங்க தரப்பில் சிரேஸ்ட அமைச்சர் சரத் அமுனுகம மற்றும் சவுதி நிதியத்தின் தலைவர் இப்ராஹிம் அல் அசாப் ஆகியோர் இதில் கையெழுத்திட்டனர்.
இதன்படி இலங்கைக்கு 60 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைக்கப்பெறும்.
இதனிடையே, ஓமான் அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சர் யூசுப் பின் அல் அலாம் ஒரு நாள் உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று மாலை இலங்கை வந்தார்.
இவர் தமது விஜயத்தின் போது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ, மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஜீ எல் பீரிஸ் ஆகியோரை சந்;தித்து கலந்துரையாடவுள்ளார்.
0 comments :
Post a Comment