மதுபோதையில் பொலிஸாரைத் தாக்கிய ஆழும்கட்சி உறுப்பினருக்கு விளக்க மறியல்.
மேல்மாகாண சபையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைச் சேர்ந்த மாகாண சபை உறுப்பினரான ரண்தேவு ரொட்றிகோ என்பவரை விளக்க மறியலில் வைக்குமாறு வத்தளை பிரதான மஜிஸ்ரேட் மஞ்சுளா ரத்நாயக்க உத்தரவிட்டுள்ளார். மதுபோதையில் பொலிஸ் அதிகாரிகள் சிலரை தாக்கி காயப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் இவர் இவ்வாறு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மேற்படிகுற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்த நிலையில் தனது சட்டத்தரணியூடாக நீதிமன்றில் அவர் கடந்த வெள்ளிக்கிழமை சரணடைந்தபோதே இவ்வாறு விளக்க மறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதேநேரம் அனுராதபுரம் பிரதேச சபையில் ஆழும்கட்சி உறுப்பினர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தொல்பொருள் ஆய்வு மையத்திற்கு சொந்தமான நிலமொன்றில் கட்டிடங்கள் இரண்டை சட்டவிரோதமாக கட்டியெழுப்பினார் என்ற குற்றச்சாட்டில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் இன்று பிற்பகல் நீதிவான் முன் ஆஜர்படுத்தப்படுவார் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
1 comments :
Proud goes to the voters for selcting a suitable person as their representative
Post a Comment