மனைவியை தாக்கிய கணவன் சடலமாக மீட்பு
குடும்பத் பிரச்சினை காரணமாக மனைவியின் தலையில் கத்தியால் தாக்கிய பின்னர், தப்பிச்சென்ற கணவன், நேற்று சடலமாக மகாவலி ஆற்றில் மீட்கப்பட்டுள்ளார். இவரின் சடலம் நேற்று மாலை கெட்டம்பே விஹாரைக்கு அருகில் மஹாவலி ஆற்றிலிருந்து மீட்கப்பட்டதாக கட்டுகஸ்தோட்டை காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
கண்டி பிரிம்ரோஸ் பகுதியைச் சேர்ந்த 38 வயதான கணேசன் பிரகாரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர் நீண்டநாட்களாக மனைவியுடன் ஏற்பட்டிருந்த பிரச்சினை காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment