சர்வதேசத்தின் பார்வையில் யாழ்ப்பாணமே உள்ளது
யாழ். மாவட்டம் அபிவிருத்தியில் சிறந்த மாவட்டமாக விளங்குவதாக யாழிற்கு விஜயம் செய்த வெளி விவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். அமைச்சர் பீரிஸ், யாழ். மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர், மற்றும் சிவில் சமூகம் சார்ந்த பல்வேறு தரப்பினரை சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் அவ்வாறு தெரிவித்துள்ளார்.
அத்துடன், வெளிநாட்டுப் பிரதிநிதிகள் எம்முடன் கலந்துரையாடும் போது யாழ்ப்பாணத்தின் அபிவிருத்தி தொடர்பாகவே கலந்துரையாடுவார்கள் எனவும், உலக நாடுகளின் பார்வையில் யாழ்ப்பாணமே உள்ளது எனவும், யாழ் மாவட்டம் பல்வேறு அபிவிருத்திகளில் முன்னிலையில் உள்ளது எனவும், கடந்த 30 வருட யுத்த காலத்தின் பின்னர் சிறிய குறைபாடுகள் இருந்தாலும், தற்போது வடபகுதி பல்வேறு அபிவிருத்திகளை கண்டு வருகின்றது எனவும், வடக்கை அபிவிருத்தி செய்ய அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் வடக்கை புனரமைத்து அந்த மக்களின் கைகளில் அவர்களின் அபிவிருத்தியைக் கொடுப்பது அரசின் நீண்டகாலத்திட்டமாகும் என தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment