Saturday, October 27, 2012

வரணியில் பொது மக்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டவர் ஒரு முன்னாள் புலி உறுப்பினர்

வரணியில் பொது மக்களை நோக்கி துப்பாக்கியால் சுட்ட நபர் முன்னாள் புலி உறுப்பினர் என இராணுவத்தினர் மேற்கொண்ட விசாரணைகளில் அடையாளங் காணப்பட்டுள்ளார். 
 யாழ்.வரணிப் பகுதியில் முன்னர் கடந்த சில தினங்களுக்கு இனந்தெரியாத நபர் ஒருவர் பொது மக்களை நோக்கி கண்மூடித்தனமாக துப்பாக்கி சுட்டதால் கடும் பரபரப்பு ஏற்பட்டது.

இச்சம்பவத்தின் போது தெய்வாதீனமாக உயிர் இழப்புக்கள் எவையும் ஏற்படவில்லை. இதன்பின்னர் தப்பிச் செல்ல முற்பட்ட போது பொது மக்கள் அவரை கலைத்து பிடித்து இராணுவத்தினரிடம் ஒப்படைத்தனர்.

இதன்பின்னர் இராணுவத்தினர் மேற்கொண்டு வந்த விசாரணையில் குறித்த நபர் ஒரு முன்னாள் புலி உறுப்பினர் என்று தெரியவந்துள்ளதோடு அவர் மறைத்து வைத்திருந்த ஒரு தொகுதி ஆயுதங்களையும் படையினர் மீட்டுள்ளனர்.

இதேவேளை இந்நபர் போரின்போது படையினரிடம் சரணடைந்து புனர்வாழ்வு பெற்று விடுதலையானவராவார். இவரை பயங்கரவாத தடுப்பு பொலிஸாரிடம் இராணுவத்தினர் ஒப்படைத்துள்ளனர்.

1 comments :

Anonymous ,  October 28, 2012 at 12:31 PM  

finally atleast we achieved the "Gun culture"

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com