உச்ச நீதிமன்றம் அரசியல் யாப்பை மீறியுள்ளது
உச்ச நீதிமன்றம் அரசியல் யாப்பை மீறி செயற்பட்டுள்ளதாக சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார் திவிநெகும சட்ட மூலம் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின தீர்ப்பை சபா நாயகருக்கு நேரடியாக அனுப்பாமல் பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு அனுப்பியதன் மூலம் உச்ச நீதிமன்றம் அரசியல் யாப்பை மீறியுள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசியல் யாப்பின் 121 (1) சரத்தின் பிரகாரம் உச்சநீதிமன்ற தீர்ப்பு சபாநாயகருக்கு அனுப்பப்பட வேண்டும் என்று குறிப்பிட்ட அவர் பாராளுமன்ற செயலாளருக்கு அறிவிக்கப்படும் உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் பாராளுமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டதாக ஏற்க முடியாது எனவும் கூறினார்.
திவிநெகும சட்டமூலம் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு தனக்கு அறிவிக்கப்படாமல் பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு அறிவிக்கப்பட்டது தொடர்பில் சபாநாயகர் நேற்று சபையில் தனது தீர்ப்பை வெளியிட்டார்.
இந்த தீர்ப்பின் பிரதிகளை ஜனாதிபதிக்கும் உச்ச நீதிமன்றத்திற்கும் அறிவிக்குமாறும் அவர் பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு உத்தரவிட்டார். சபாநாயகரின் தீர்ப்பு பற்றிய அறிவிப்பு ஒரு மணி நேரம் இடம்பெற்றது. அவரின் தீர்ப்பிற்கு எம்.பிக்கள் எழுந்து நின்று மேசையில் தட்டி வரவேற்பு தெரிவித்தனர்.
0 comments :
Post a Comment