Saturday, October 27, 2012

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உள்வீட்டு இழுபறி தெருவுக்கு வந்தது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பை அரசியல் கட்சியாக பதிவு செய்ய வேண்டும் என அதன் பங்காளிக்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது. ஆனால் சம்பந்தன் தலைமையிலான தமிழரசுக்கட்சியினர் இவ்விடயத்தினை பிற்போட்டு சாட்டுப்போக்கு சொல்லி வருகின்றனர். இதற்கு அரச ஆதரவும் பெறப்பட்ட சந்தர்பங்களும் உண்டு.

இந்நிலையில் இவ்விடயம் தொடர்பாக கலந்துரையாடும் நோக்கில் நேற்று நடத்தப்பட்ட கலந்துரையாடல் இணக்கமின்றி நிறைவடைந்துள்ளது. இது தொடர்பாக தொடர்ந்தும் பேசலாம் எனத் தெரிவித்த பதிவு செய்யப்படாத தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர் சம்பந்தன் அதற்கான உறுதியான திகதி அறிவிக்காமல் சென்றுவிட்டதாக விசனம் தெரிவிக்கப்படுகின்றது.

அதேநேரம், தமிழரசு கட்சியை தவிர்ந்த கூட்டமைப்பின் ஏனைய கட்சிகளும் இதற்கு எவ்வித பதில்களையும் வழங்கவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் தேசிய கூட்டமைப்பை அரசியல் கட்சியாக பதிவு செய்ய வேண்டும் என தர்மலிங்கம் சித்தார்த்தன் தலைமையிலான தமிழீழ மக்கள் விடுதலை கழகம், செல்வம் அடைக்கலநாதன் தலைமையிலான தமிழீழ விடுதலை இயக்கம், சுரேஷ் பிரேமசந்திரன் தலைமையிலான ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி மற்றும் வீ ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலை கூட்டணி ஆகியன தொடர்ந்தும் கோரிக்கை விடுத்து வருவதுடன் தமது அதிருப்தியை பகிரங்க மேடைக்கும் கொண்டுவர ஆரம்பித்துள்ளனர்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அதன் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கூட்டமைப்புக்குள் பிரச்சினை இருக்கத்தான் செய்கின்றது. இதை தீர்ப்பதற்கான கருத்தாடல்கள் நடந்து கொண்டுள்ளன';. தமிழ் தேசிய கூட்டமைப்பை தனிக்கட்சியாக பதிவு செய்வது பற்றிய பிரச்சினையே இருக்கின்றன. தமிழ் தேசிய கூட்டமைப்பை தனியொரு கட்சியாக பதிவு செய்ய வேண்டுமென்ற கருத்து இருந்தே வந்துள்ளது. ஆனால், இதிலுள்ள அங்கத்துவ கட்சிகள் சில தயக்கம் காட்டுகின்றன' என்று தெரிவித்துள்ளதார்.

இந்தநிலையில், நேற்றிடம்பெற்ற கலந்துரையாடலின் போது, தமிழ் தேசிய கூட்டமைப்பை அரசியல் கட்சியாக பதிவு செய்வதற்கு அந்த கூட்டமைப்பின் பிரதான கட்சியான தமிழரசு கட்சிக்கு விருப்பம் இல்லை என்ற கருத்து முன்வைக்கப்பட்டதுடன் கூட்டமைப்பு கட்சிகள் மத்தியில் புரிந்துணர்வு உடன்பாடு ஒன்றை செய்து கொள்ளலாம் என்ற கருத்தை தமிழரசு கட்சி தெரிவித்ததுள்ளது.

தமிழரசு கட்சியின் இந்த நிலைப்பாட்டை ஏனைய கூட்டமைப்பு கட்சிகள் ஏற்று கொள்ளவில்லை.

அத்துடன், தமிழ் தேசிய கூட்டமைப்;பு புதுடில்கி சென்ற போது தமிழர் விடுதலை கூட்டணியையும், தமிழீழ மக்கள் விடுதலை கழககத்தையும் இணைத்து கொள்ளமை தொடர்பாகவும் நேற்றைய கலந்துரையாடலில் அதிருப்தி வெளியிடப்பட்டது.

இதன்போது, தமிழரசு கட்சியின் சார்பில் நியாயங்கள் முன்வைக்கப்பட்டன.

எனினும், கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகள் என்ற வகையில் கூட்டத்திற்கு முன்னரோ அல்லது பின்னரே புதுடில்கி பயணம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டிருக்க வேண்டும் என தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் வீ ஆனந்த சங்கரி சுட்டிக்காட்டியுள்ளார்.

3 comments :

Anonymous ,  October 27, 2012 at 11:38 PM  

First try to arrange your own house
before you stretch finger on the
others .Please do not try to play continuous bogus dramas to your followers.

Anonymous ,  October 28, 2012 at 12:19 PM  

It's really a big question how these
irresponsible group of people would take the whole tamil nation to a satifactory solution.

Anonymous ,  October 30, 2012 at 6:04 AM  

இவர்களில் எவரும் மக்களைப்பற்றியோ மக்களின் பிரச்சனை பற்றியோ கரிசனை இல்லாதவர்களாகக் காணப்படுகின்றனர். தமிழரசுக் கட்சி: தமிழ்காங்கிரசு;தமிழர் விடுதலைக் கூட்டணி என எமது அரசியல்வாதிகள் இதே கதிரைக்கான அடி தடி அரசியல்தான் நடத்தி வருகின்றனர். தமிழ் மக்களை வீடுகளில் இருந்து விரட்டி காடுகளுக்குள் விட்ட பின்னும் திருந்தாத இவர்களால் தமிழ் மக்களுக்கு என்ன கிடைக்கும்? சனியன்கள் எக்கேடு கெட்டாவது போகட்டும்.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com