குப்பைமேட்டிலிருந்த எஸ்எம்ஜி ஆயுதம் கண்டுபிடிப்பு.
அக்கரைப்பற்று பிரதேச செயலக பள்ளக்காடு ஆலிம்நகர் பிரதேசத்தில் குப்பை மேட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த S.M.G Sterling Machine Gun துப்பாக்கி ஒன்றும், தோட்டா கூடு ஒன்றும், அதன் 30 ரவைகளும் நேற்று முன்தினம் புதன்கிழமை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அக்கரைப்பற்று பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய அக்கரைப்பற்று பதில் பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி எம்.கே.இப்னு அசார் தலைமையில் பொலிஸ் கொஸ்தாப்பல்களான ஜெயசுந்தர-4189, ஜெயசேன -42249, ஜெயசேன -79560 ஆகியோர் மேற் கொண்ட தேடுதலில் மேற்படி ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டன.
இவ் ஆயுதம் யாரால் மறைத்து வைக்கப்பட்டது, யார் சம்மந்தப்பட்டுள்ளார்கள் என்று கண்டுபிடிக்கப்படவில்லை. இது தொடர்பாக அக்கரைப்பற்று பதில் பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி எம்.கே.இப்னு அசார் தலைமையிலான பொலிஸ் குழு மேலதிக ர விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
0 comments :
Post a Comment