Friday, October 19, 2012

கிழக்கில் மீன்கள் கரையொதுங்குவதற்கான காரணம் கண்டுபிடிப்பு! சுனாமி அபாயம் இல்லை

கடந்த நாட்களாக கிழக்கில் காத்தான்குடி உட்பட பல கடற்பகுதியில் பல்லாயிரக் கணக்கான மீன்கள் கரை ஒதுங்கியதால் மக்கள் அச்சம்மடைந்துள்ளதாக தெரி விக்கப்படுகின்றது. எனினும் ஆழ்கடலி லுள்ள குளிர் நீர் கரையை நோக்கி வருவதாலேயே மீன்கள் இறந்த நிலையில் கரையொதுங்குவதாக நாரா நிறுவனம் தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் உயிரிழந்த நிலையில் பெருமளவான மீன்கள் கரை ஒதுங்கியிருந்தன. கண்ணுக்கு தெரியாத மிகச் சிறிய தாவரமான அல்கே எனப்படும் தாவரங்கள் நீரிலிருக்கும் ஒட்சிசனை உறிஞ்சி எடுக்கின்றன. இதனால் மீன்கள் சுவாசிக்க ஒட்சிசனின்றி கடலிலேயே இறப்பதாக நாரா எனப்படும் கடல்வாழ் உயிரினங்கள் ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் டொக்டர்.கே.அருளானந்தம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை கடந்த சில தினங்களாக இலட்சக்கணக்கான பெறுமதியான மீன்கள் பிடிக்கப்பட்டுள்ளன. கடலிலும் சில மாற்றங்கள் ஏற்ப்பட்டுள்ளதாக மக்கள் உணர்கின்றனர். இதனால் மீண்டும் சுனாமி தாக்கம் ஏற்படலாமென கிழக்கு பகுதியிலுள்ள மக்கள் அச்சமடைந்துள்ளனர். எனினும் கடலில் ஏற்ப்பட்டுள்ள மாற்றங்கள் இயற்கை அனர்த்தத்திற்கான முன்னறிவித்தல் அல்லவென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆழ்கடலிலுள்ள குளிர் நீர் கரையை நோக்கி வருவதால் மீன்களும் கரையை நோக்கி வருகின்றன. இதனால் பொதுமக்கள் வீணாக அச்சப்படத் தேவையில்லையென துறைசார் நிபுணர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com