கள்ளக் காதலை முறித்ததால் அவளை கொலை செய்தேன் - சந்தேக நபர்
தன்னுடன் இருந்த கள்ளக் காதலை துண்டிக்க முயன்றதால்தான் குறித் பெண்ணை கொலை செய்தேன் என, நாகர்கோவிலில் பெண்ணொருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கைதான சந்தேக நபர் பொலிஸில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, நாகர்கோவிலை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவர் பஹ்ரைனில் சமையல் தொழில் செய்கிறார். இவரது மனைவி ஜான்சிமேரி (39). இவர்களுக்கு ஜான் ஹென்றி (18) என்ற மகனும், ஜெனிபா (17), ஸ்வீட்டி (3) என்ற மகள்களும் உள்ளனர்.
நாகர்கோவில், ராமன் புதூர் பகுதியில் உள்ள நாஞ்சில் நகரில் வாடகை வீட்டில் ஜான்சிமேரி குழந்தைகளுடன் வசித்து வந்த அவர் கடந்த 4ம் திகதி வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
கொலைச் சம்பவம் தொடர்பாக கோட்டார் பகுதியை சேர்ந்த கருணாகரன் என்பவரை பொலிஸார் கைது செய்தனர். அவர் பொலிஸாரிடம் அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்திருப்பதாவது, வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த சுப்பிரமணியன், முதலில் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் சரலூரில் வசித்தார். அப்போதே எனக்கும், ஜான்சிமேரிக்கும் பழக்கம் ஏற்பட்டது.
இந்த பழக்கம் அதிகரித்து கள்ளக்காதலாக மாறியது. சுப்பிரமணியன், வெளிநாட்டில் இருந்ததால், எங்களுக்குள் எந்த இடையூறும் இல்லை. நாங்கள் அடிக்கடி சந்தித்து தனிமையில் உல்லாசமாக இருந்து வந்தோம்.
இதற்கிடையே என்னுடன் அவரது மனைவிக்கு இருந்த கள்ளக்காதல், சுப்பிரமணியனுக்கு தெரிந்து சரலூரில் இருந்து நாஞ்சில் நகரில் உள்ள வீட்டுக்கு மனைவியை சுப்பிரமணியன் மாற்றினார். அவர் ஜான்சிமேரியை கண்டித்தார். ஆனால் வீடு மாற்றியும், கணவரின் கண்டிப்புக்கு பிறகும் கள்ளக்காதல் நீடித்து வந்தது.
எனக்கு 6 ஆண்டுளுக்கு முன்பு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நடந்தது. குழந்தை இல்லை. இதனால் ஜான்சிமேரியின் குழந்தைகள் மீது எனக்கு அதிக பாசம் உண்டு. 3 வயது குழந்தை ஸ்வீட்டி மீது அதிக பாசம் வைத்திருந்தேன். எனக்கு வேறு பெண்களுடனும் தொடர்பு இருந்தது. அதை ஜான்சிமேரி கண்டித்தார். இனிமேல் எனது வீட்டு பக்கம் வராதே என்று கூறினார்.
கடந்த 6 மாதமாக அவர் என்னுடன் பழகுவதை தவிர்த்தார். எனது தொடர்புகளை படிப்படியாக துண்டித்த அவர் வேறு ஒரு ஆட்டோ டிரைவருடன் பழக்கத்தை ஏற்படுத்தி கொண்டார். இது எனக்கு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதன் மூலம் எனக்கு பணமோ, வேறு எந்த உதவியோ கிடைக்காது என்ற நிலைமை ஏற்பட்டது. அதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் அவரை கொலை செய்துவிட்டேன். இவ்வாறு கருணாகரன் பொலிஸாருக்கு அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்
1 comments :
இப்படி தான் இன்றைய வடமாகாண கலாச்சாரம். இதை ஏற்றுக்கொள்ளமுடியாத புலம்பெயர் வெங்காயங்கள், இதற்கு கெல்லாம் ஸ்ரீ லங்கா ஆமிக்காரங்கள், அரசாங்கம் மற்றும் மகிந்தா குடும்பம் தான் காரணம் என்று வழமையான
புலிப் புராணம் பாடி பிழைப்பு நடத்தும் படலத்தை தொடர்கிறது.
Post a Comment