சுற்றுலாவிற்கு பொருத்தமான நாடுகள் வரிசையில் இலங்கை முன்னணியில்.
உலக சுற்றுலாவிற்கு பொருத்தமான நாடுகள் வரிசையில், இலங்கை முன்னணியில் உள்ளதாக, உலகின் முன்னணி சுற்றுலா வழிகாட்டல் சஞ்சிகையான லோன்லி பிளேன்ட் அறிவித்துள்ளது. பல தசாப்தங்களாக மௌனமாக இருந்த இலங்கை தற்போது, தேசத்தின் அழகையும் கவர்ச்சியையும் சர்வதேசமெங்கும் பிரபல்யப்படுத்தி வருவதாக, லோன்லி பிளேன்ட் செய்தி ஆசிரியர் கூறியுள்ளார்.
கலாசார பல்வகைத்தன்மை உள்ளிட்ட வரலாற்று பெறுமதிமிக்க கேந்திர நிலையங்களையும், இலங்கையில் பார்வையிட வாய்ப்புகள் உள்ளன. அழகிய தேசமொன்றை கண்டுகளிக்கக்கூடிய வாய்ப்பு, சுற்றுலாப் பயணிகளுக்கு கிடைக்கிறது. கடந்த பல ஆண்டுகளாக இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பொருட்களின் விலையும், நியாயமாக காணப்படுகிறது. இலங்கையை சுற்றுலாவிற்கான கேந்திர நிலையமாக கூற முடியுமென்றும், அவர் கூறியுள்ளார்.
சுற்றுலா கவர்ச்சி அதிகமாக உள்ள பிரதேசங்களையும், கண்டுகளிக்கக்கூடிய வாய்ப்பு இருப்பதாகவும் லோன்லி பிளேன்ட் சஞ்சிகை தெரிவித்துள்ளது. கிழக்கின் கரையோரம், புத்தளத்தில் வரலாற்று முக்கியத்துவமிக்க இடங்கள், திமிங்கிலங்கள் உட்பட, தென்னிலங்கை கரையோரம், யால, வில்பத்து வன சரணாலயங்கள் உள்ளிட்ட கவர்சசிகரமான இடங்களை பார்வையிட, சுற்றுலாப் பயணிகளுக்கு முடியும். இலங்கைக்கு வரும் அனைத்து சுற்றுலாப் பயணிகளுக்கும், தமது வாழ்வில் புதிய அனுபவங்களை சேர்த்துக்கொள்ள வாய்ப்பு கிடைக்குமென்றும், லோன்லி ப்ளேன்ட் சஞ்சிகை மேலும் தெரிவித்துள்ளது.
0 comments :
Post a Comment