இலங்கையர் ஒஸ்ரேலியாவில் தற்கொலை முயற்சி
அவுஸ்திரேலியாவில் இருந்து இன்று நாடுகடத்தப்படவுள்ள நிலையில் இலங்கை தமிழர் ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவரை நாடு கடத்தக்கூடாது என்ற அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இறுதிநேர சட்ட நடவடிக்கைகளும் தோல்வியடைந்த நிலையிலேயே இந்த தற்கொலை முயற்சியில் அவர் ஈடுப்பட்டுள்ளார்.
42 வயதான குறித்த இலங்கை தமிழர் அவுஸ்திரேலியாவில் இருந்து இன்று பிற்பகல் 3 மணிக்கு நாடுகடத்தப்படவுள்ளார்.
இந்தநிலையில் இன்று அதிகாலை 5 மணியளவில் அவர் தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.
தற்கொலை முயற்சியை அடுத்து ரோயல் மெல்போன் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட அவர், சிகிச்சைக்கு பின்னர் மீண்டும் மாரிபிநோங் தடுப்பு சிறைக்கு கொண்டுச் செல்லப்பட்டவுள்ளதாக அவுஸ்திரேலிய செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவத்தை அடுத்து, அங்கு கூடிய 50க்கும் மேற்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள், குறித்த இலங்கை அகதியை நாடு கடத்தப்படக்கூடாது என்று கோரிக்கை விடுத்தனர்.
எனினும் இந்த கோரிக்கையை அவுஸ்திரேலிய அதிகாரிகள் கருத்திற்கொள்ளவில்லை என்று அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
0 comments :
Post a Comment