தலீபான்களால் சுடப்பட்ட மாணவி மலாலா எழுந்து நடக்கிறார்: தந்தை தகவல்
பாகிஸ்தானை சேர்ந்த 15 வயதான பள்ளி மாணவி மலாலா, தீவிரவாதிகளுக்கு எதிராக கருத்து தெரிவித்ததற்காக, கடந்த 9-ந்தேதி தலீபான் தீவிரவாதிகளால் தலையில் சுடப்பட்டார். ஆபத்தான நிலையில் இருந்த அவருக்கு பாகிஸ்தானில் உள்ள ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.
இந்த நிலையில், பாகிஸ்தான் அதிபர் ஆசிப்அலி சர்தாரி ஏற்பாட்டின்பேரில், அவர் லண்டன் பர்மிங்ஹாமில் உள்ள ராணி எலிசபெத் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. மகள் சிகிச்சை பெறும் ஆஸ்பத்திரிக்கு அவரது தந்தை ஜியாவுதீன் யூசுப்ஜாய் நேரில் வந்து பார்வையிட்டார்.
அப்போது அவர், தனது மகளுக்கு சரியான நேரத்தில், சரியான இடத்தில், சரியான சிகிச்சை அளிக்கப்படுவதாக கண்ணீர் மல்க தெரிவித்தார். மேலும், மலாலா உடல்நிலையில் வேகமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், மலாலா எழுந்து நடப்பதாகவும் அவர் கூறினார்.
0 comments :
Post a Comment